பாரிஸில் வி.எஸ்.வி கலைக்கூடத்தின் 15 ஆவது ஆண்டுவிழா வெகுசிறப்பாக இடபெற்றது!'!📷

நேற்றைய தினம் பாரிஸில் வி.எஸ்.வி கலைக்கூடத்தின் 15 ஆவது ஆண்டுவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.இயலிசைநாடகம்,பேச்சு, விவாதம் என்று இங்கு பிறந்து வளரும் நம் குழந்தைகள் வியக்கத்தகும்விதத்தில் தமிழ்,ஆங்கிலம்,பிரெஞ்சு மொழிகளில் பல்சுவை நிகழ்ச்சிகளால் அசத்தியிருந்தார்கள்.


புலம்பெயர் நாட்டில் குழந்தைகள் சார்ந்து தம்மை ஒறுத்து அவர்களுக்காகவே வாழும் பெற்றோரின் தியாகங்களுக்கான நல்லறுவடையாகவே,அவர்களின் செயற்பாடுகளைக்கண்ணுற்றேன். எத்தனை ஆர்வம்?,எத்தனை ஈடுபாடு?,தம்மைத்தாமே வழிநடத்தும் செயற்றிறன்!,இந்தியத்தமிழ்,இலங்கைத்தமிழ் என்று குறுகிய மனப்பாங்கில்லாத வியத்தகு ஒற்றுமை.......(அதைத்தந்தது பிரெஞ் என்னும் பொதுமொழி.மொழியறிவு உறவை வளர்க்கும்.).

காணும்போது கண்ணில் நீர்துளிர்த்தது.உலகெல்லாம் வீசியெறியப்பட்டாலும் தமிழராய் நாம் வென்றுவிட்டோம் நம் அடுத்த சந்ததியிடமும் என்று பெருமிதம் கொண்டேன்.15 வருடங்களுக்கு முன்னர் இக்கலைக்கூடத்தின் நிறுவனர் திரு விஜயகாந்தன் அவர்கள் கண்ட கனவு   மெய்ப்பட்டிருப்பதைக்காண அவர் இன்று உயிரோடு இல்லை என்பதே பெருந்துயரம்..


மூன்று வருடங்களுக்கு முன் இளவயதிலேயே அவர் இயற்கை எய்திவிட்டார்.ஆனாலும் அவரின் பாரியார் திருமதி சாந்தி அவர்கள் கண்களில் கண்ணீரைத்தேக்கிவைத்தாலும் மனதை நம்பிக்கைகளால் நிரப்பிவைத்து, மிகத்துணிவோடு,கணவர் வளர்த்தெடுத்த  வி.எஸ்.வி கலைக்கூடக்குழந்தைகளின் முழுமையான ஆதரவுடன் பங்களிப்புடன் மிக வெற்றிகரமாக செயற்படுவது பெண்ணாகவும் பெருமைகொள்ள வைத்தது.

நாம் நல்விதை விதைத்தால்,அதன் வளர்ச்சிக்காய் தன்னம்பிக்கையோடு உழைத்தால் அது விருட்சமாகியே தீரும் என்பதை நேற்றையதினம் மீண்டும் உணர்வால் உறுதிசெய்து கொண்டேன்.இவர்களின் வளர்ச்சிக்கு இறையாசியும் நிறுவனர் திரு விஜயகாந்தன் அவர்களின் ஆசிர்வாதமும் எப்போதும் தொடரும்.நிகழ்வைத்தொகுத்தளித்ததில் பெருமைகொள்கிறோம் ....திரு அருள்மொழித்தேவனும் தொகுப்பில் இணைந்திருந்தார்....இந்தப்புலம்பெயர் தேசங்களில் நம்மை நாம் வளர்த்தெடுக்கும் ஆன்மபலத்தைத்தந்த அனைவருக்கும் பொதுவான ஆண்டவனுக்குக்கோடி நன்றிகள்..Powered by Blogger.