வாழ்க்கை என்றும் பொசுக்கிவிடாமல் காத்தல்..!!

வாழ்க்கை  வண்ணமானது
அதிலும் சில
வானவில்லைப் போன்று
அதிஅற்புதமானது,

பற்றிப் பிடிக்கும் பெற்றவர்கள்,
தாயாய் மாறும் தமக்கை
கண்ணீர் துடைக்கும் தங்கை
தாங்கிகொள்ளும் அண்ணன்
தவித்தால் துடிக்கும் தம்பி
விட்டுக் கொடுக்காத காதல்
விட்டுவிடாத இல்லறம்
தோள் சாய்க்கும் தோழமை
நமக்காய் நம்மிடம் வாதாடும் நட்பு
விழுந்துவிட்டால் சிரிக்காத உறவுகள்
இவை ஏதும் கிட்டாவிடினும்
வாழ்க்கையை வாழ்ந்து
வெற்றிகொள்ளும் மனதைரியம்,

பூவைப்போன்ற நேசங்களை
பொசுக்கிவிடாமல் காத்தால்
வாழ்க்கை என்றும் வசந்தமேதான்.

கோபிகை!!

Powered by Blogger.