வறுமையை விரட்டுவதற்கு மனதில் வைராக்கியத்தையே வளர்க்க வேண்டும்.!!

பட்டினியாக கிடந்தாலும் சாப்பிட்டுங்களா என யார் கேட்டாலும் "ஆம்" என சொன்ன பரம்பரைகள் முன்னேறி விட்டன.


யாரும் தருவார்கள் என கையேந்திய பரம்பரைகள் காலம் காலமாக அப்படியே இருக்கின்றன.

வறுமையை விரட்டுவதற்கு மனதில் வைராக்கியத்தையே வளர்க்க வேண்டும்.

சிலர் நன்றாக உழைத்தும் வறுமையில் கிடப்பார்கள் காரணம் சேமிக்க தெரியாது.

வாங்கி வாங்கி பழகினாலும் அடுத்தவன் கொடுப்பதையும் அடுத்த நாள் விற்றுவிடும் மனநிலையில் உள்ளோரால் எப்படி முன்னேற முடியும்.

யாரும் தரும் 10 ஆயிரம் ரூபாவை விட உழைத்து பெறும் 1000 ரூபா பெறுமதிமிக்கது என கருதும் மனநிலை எமக்கு வரவேண்டும். இல்லையேல் வாழ்வில் என்றும் வறுமையை ஒழிக்க முடியாது.

கையேந்துவதால் வறுமையை அதிகரிக்கவே முடியும். மனநிலையையும் மாற்றி விடுவார்கள்.

உழைப்பின் மகிமையை உணர்ந்து செயற்பட்டாலே வறுமையை போக்க முடியும். இதை எல்லாம் சொல்லி கொடுக்காமல் படம் போட்டு பணம் தேடும் பரம்பரை ஒன்றை வளர்த்து வருகின்றோம்.

Blogger இயக்குவது.