வவுனியா உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்!!
ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி ஆகியோரை பதவி விலகுமாறு கோரி கடந்த நான்கு நாட்களாக கண்டியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அத்துரலிய தேரருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல போராட்டங்கள் இடம்பெற்றிருந்த வேளையில் வவுனியா A9 வீதியில் குடியிருப்பு துர்கை அம்மன் ஆலய சந்தியில் இன்று காலை VT கோபால் என்பவர் அத்துரலிய தேரருக்கு ஆதரவாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.இந்நிலையில் ஆளுநர்களான ஆசாத் சாலி, மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவி விலகலின் பின் இன்று பிற்பகல் 3மணியளவில் கோபால் மற்றும் அவருடன் கூட இருந்தவர்களும் தமது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர் என்பதுடன் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் பதவி விலகாத பட்சத்தில் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனவும் கோபால் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo



.jpeg
)





கருத்துகள் இல்லை