லண்டன் காலப்போக்கில் பயங்கர வெப்பநிலையை எதிர்நோக்கும்!!

பார்சிலோனா முன்னர் கடுமையான வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் லண்டனும் அதே போன்ற காலநிலையைச் சந்திக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆராய்ச்சியின்படி, மூன்று தசாப்தங்களில் லண்டனில் கடுமையான வெப்பம் நிலவும் என்றும் அவ்வாறான காலநிலை பார்சிலோனாவில் இன்று நிலவும் காலநிலையையே ஒத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டளவில் ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட்டின் காலநிலை மராகெஷ்ஷின் இன்றைய காலநிலைபோலவும், ஸ்ரொக்ஹோமின் காலநிலை புடாபெஸ்ற்றின் இன்றைய காலநிலைபோலவும் இருக்கும் என்று காலநிலை நெருக்கடியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட துருவப்பகுதியில் தற்போது மிதமான அல்லது குளிர்ந்த மண்டலங்களில் உள்ள நகரங்களின் காலநிலை அடுத்த முப்பது ஆண்டுகளில் பூமத்திய ரேகைக்கு அண்மையிலிருக்கும் நகரங்களின் காலநிலையை ஒத்திருக்கும் என்றும் இதனால் சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இன்னும் 30 ஆண்டுகளில் மொஸ்கோவின் காலநிலை பல்கேரியாவின் சோபியாவை ஒத்திருக்கும் என்றும், சியாற்ரில் காலநிலை சான் பிரான்சிஸ்கோவைப் போலவும், நியூயோர்க் காலநிலை வெர்ஜினியா கடற்கரைக் காலநிலையை ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

உலகளாவிய வெப்பமயமாதலின் விளைவாக மிதமான காலநிலையில் உள்ள நகரங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்று சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.