கூட்டுறவின் ஊடாக சமூக பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை!!

அழிவடைந்துள்ள கூட்டுறவுத் துறையின் அபிவிருத்திகளை பலப்படுத்துவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட கூட்டுறவுத்துறை ஆணையாளர் பொ.பிரணவநாதன் தெரிவித்தார்.


எதிர்காலத்தில், இன்னும் சிறப்புற கூட்டுறவு துறை தனது சேவையைச் செய்யுமென அவர் குறிப்பிட்டார்.

97வது கூட்டுறவு துறை நிகழ்வையொட்டி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “கூட்டுறவானது சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு அமைப்பு. கூட்டுறவுத்துறை 525 ஆயிரம் அங்கத்தவர்களைக் கொண்டது. தன்னிறைவுப் பொருளாதாரத்தில் போட்டி காரணமாக தனியார்களின் போட்டி காரணமாக கூட்டுறவு பாதிக்கப்பட்டுள்ளமை உண்மை.

கூட்டுறவு கிளைகளைப் பலப்படுத்துவதன் ஊடாக வியாபாரத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போட்டி வியாபாரமும், போசணை வியாபாரத்திற்கு முன்னுரிமை அளித்து வருகின்றமையால், கூட்டுறவுத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கூட்டுறவுத் துறை புத்தாக்கம் பெற வேண்டுமென்பதற்காக பல உத்திகளைக் கையாண்டு வருகின்றோம்.

கூட்டுறவுத் துறை காலப்போக்கில் வெற்றிபெறும் என்பது எமது நம்பிக்கை. கூட்டுறவுத் துறையின் நிதி சார்ந்து, கூட்டுறவு சங்கங்கள், கிராமிய வங்கிகள் திறம்பட இயங்கி வருகின்றன.

கூட்டுறவு மற்றும் மத்திய வங்கியின் ஆசீர்வாதத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வருடம் 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த சந்திப்பில், யாழ்.மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.