கொழும்பில் பெண்கள் உட்பட 9 பேர் கைது!

பொரலஸ்கமுவ – அபேரத்ன மாவத்தையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின்போது போதைப்பொருளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேக நபர்கள் 9 பேரும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும், அதனை அருந்துவதற்காக பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் சிலவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.