விகாரைகள் எரியும்..!!
மீண்டுதிர்க்கும் பூக்கள் போல்
உன் ஜன்னல்களில் சிறகு விரித்தேன்
உன் ஜன்னல்களில் சிறகு விரித்தேன்
முத்தப் பசியின் நாட்களின் பித்தம்
உச்சமாகிக் கிளையெறிந்தேன்
வானவில்லென வந்து போகுமென்
சிந்தையின் வர்ணங்கள் ஊற்றிவிட்டேன்
கல்லென விருந்த வென் நெஞ்சத் தொட்டி
யெங்கும் புன்னகை மீனென நுளையாயோ
மெல்லனக் கேட்கும் முனங்கலிலும்
மௌனமாகி நீ தருமிசையிலும்
வானென விரியுது வசந்தம் நித்தமும் தோற்குதுமுத்துக்களும் வைடூரியங்களும்
யாவும் யாதுமாவென சொற்ப கணத்தில்
கலைகையில் ஆசானாகுது காலம்
காலமிடைவெளிகளை விடுவதில்லையென
தினமோதுது மனது
கும்மிருட்டு நிசியிலும் துப்பாக்கியேந்தி நீ தப்பாமல் நின்றது இப்போதும்நினைவினில்
நிலவில்லா நிலத்திலும் நீயிருந்தாயன்று
நிலவெனவுன்னைபின் தொடர்ந்தேனன்று
பிரம்மனின் கணக்கில் கறையிருப்பதை அறியவில்லை என் தேச வளத்தில்
குறையிருப்பதை அறியவில்லை குறுகியது நிலம். கருகியது கடல் .சிவந்தது வான்.
யுத்தமேகங்கள் முகாரியிறைக்க நெருப்பு பீலிகள் நட்சத்திரங்களாயுதிர
நீ தீயாகிப் போனாய் ஆனாலுமென்ன நினைவெனும் ஈழத்தின் காலவெளியில்
கருவாகி பிறப்பாய் அன்றலருமீளம்
உன் பெயர் சொல்லும் நினைவெனுமேட்டில்
காலம் காவியம் பாடும் காதலின் கீதையாய்
காலம் கார்த்திகை யிறைக்கும்
நீ பிறந்ததன் களிப்பில்
காலப் பிரார்த்தனைகள் நீளும்
அன்று வென் நிலம் நிமிரும் கடல் களிக்கும்
வான் வசந்தத்தை பூசியே மிதக்கும்
அக்கணம் நாமிருவரும் ஓடுவோம் ஓடுவோம் உலகின் அந்தம் வரையோடுவோம்
அதுவரை அக்கணத்தை வைத்து
இக்கணத்தை வரைவோம்
இனி விகாரைகள் எரியும்
விதைகள் விருட்சமான பின்
கன்னியாவைக் காக்கவென விருப்போம்
கன்னி நீ பிறப்பாயென நெருப்பாய்.

கருத்துகள் இல்லை