பங்களாதேஷின் முன்னாள் சர்வாதிகார இராணுவ ஆட்சியாளர் காலமானார்!

பங்களாதேஷின் முன்னாள் ஜனாதிபதியும், இராணுவ ஆட்சியை நடத்திய கடைசி சர்வாதிகாரியுமான ஹூசைன் முகம்மட் எர்ஷாட் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.


பங்களாதேஷில் அப்துஸ் சர்தார் தலைமையில் ஆட்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, கடந்த 1982 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியின் மூலம் ஹூசைன் முகம்மட் எர்ஷாட் அந்த ஆட்சியைக் கவிழ்த்தார்.

ஏறத்தாழ எட்டு வருடங்கள் பங்களாதேஷை ஆட்சி செய்த அவர் சர்வாதிகாரியாக மாறி, அந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பின்னர், ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக ஆட்சியை விட்டு அகற்றப்பட்டார். எர்ஷாட் ஆட்சிக் காலத்தின் போது தான் பங்களாதேஷின் தேசிய மதமாக இஸ்லாம் அங்கீகரிக்கப்பட்டது.

பின்னர், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட எர்ஷாட், ஜாட்டியா என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்து மக்களின் ஆதரவை பெற்றார்.

வழக்குகளில் இருந்து விடுதலையான பின்னர் தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பலமுறை தெரிவு செய்யப்பட்டார்.

அண்மைக்காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எர்ஷாட், டாக்காவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் ஜூன் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.45 மணியளவில் தனது 91 ஆவது வயதில் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீத், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அந்நாட்டின் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.