ரம்பின் இனவெறி பதிவுகளுக்கு எதிராக குற்றச்சாட்டு!
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸின் பெண் உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டதையடுத்து அவருக்கு எதிராக இனவெறி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட ருவிட்டர் பதிவில், “வெளி நாடுகளில் இருந்து வந்து ஜனநாயக கட்சியில் இணைந்து காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள், உலகத்திலேயே சக்தி மிகுந்த நாட்டின் அரசு எப்படி செயல்பட வேண்டுமென எமக்கு வகுப்பெடுக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் அந்த பதிவில் நேரடியாக காங்கிரஸ் பெண்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ரஷிதா டலீப், ஒகாஸியோ கோர்டெஸ், ஐயானா ப்ரெஸ்லி மற்றும் இல்ஹான் உமர் உள்ளிட்ட காங்கிரஸ் பெண்களையே அவர் மறைமுகமாக குறிப்பிடுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காங்கிரஸ் உறுப்பினர்களான குறித்த நான்கு ஜனநாயகக் கட்சியின் கறுப்பினப் பெண் பிரதிநிதிகளில் மூவர் அமெரிக்காவில் பிறந்துள்ள நிலையில் ஒருவர் தன்னுடைய குழந்தை பராயத்தில் அபிரிக்க நாடொன்றில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை