அடுத்த தலாய்லாமாவை தாங்களே தீர்மானிக்கவுள்ளதாக சீனா அறிவிப்பு!!
அடுத்த தலாய் லாமா யார் என்பது குறித்து தாமே தீர்மானிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த விடயத்தில் இந்தியா தலையிட்டால் இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா சூசகமாக தெரிவித்துள்ளது.
திபெத் ஆன்மீக தலைவரான தலாய் லாமா 1959-ம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று இமாச்சல் பிரதேஷ் மாநிலத்தின், தர்மசாலாவில் தங்கியுள்ளார். இவருக்கு தற்போது 84 வயதாகின்றது. இந்தநிலையில், கடந்த சில காலமாகவே அடுத்த தலாய் லாமா யார் என்ற கேள்வி எழுந்து வருகின்றது.
எனவே, அடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் தீர்மானிக்கும் என்றும், அதில் இந்தியா தலையிட்டால் இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து திபெத்தில் துணை அமைச்சர் பதவி வகிக்கிற சீன அதிகாரி வாங் நேங் ஷெங் கூறுகையில், “தலாய் லாமா நியமன விவகாரம், வரலாறு, மதம் மற்றும் அரசியல் ரீதியிலானது.
அதற்கான வரலாற்று அமைப்புகள் உள்ளன. நடைமுறைகளும் உள்ளன. தலாய் லாமா யார் என்பதை எந்த தனிப்பட்ட நபரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள மக்களோ தீர்மானிக்க முடியாது” என தெரிவித்தார்.
இதே போன்று சீனா, திபெத் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் ஜா லுவோ கூறுகையில், “அடுத்த தலாய் லாமா யார் என்பது சீனாவுக்கு முக்கியமான பிரச்சினை. இதில் எந்த நட்பு நாடோ, சீனாவின் நண்பர்களோ தலையிட கூடாது” என குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை