ஆப்கானிஸ்தானில் விருந்தகத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்!!

ஆப்கானிஸ்தானில் விருந்தகத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சிலர் நடத்திய தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


பத்கிஸ் மாகாணத்தின் தலைநகர் குவல்-இ-நாவ் நகரில் உள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றுக்குள் தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் பாரிய ஆயுதங்களுடன் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர். தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால் பலர் காயமடைந்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், தகவலறிந்து பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விருந்தகத்தை சுற்றிவளைத்தனர்.

அதனை தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சமர் இடம்பெற்றதுடன், சுமார் 5 மணி நேரம் இந்த மோதல் நீடித்தது.  இந்த தாக்குதல்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே சமயம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பொதுமக்கள் உட்பட 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அரச படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அரச படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை அங்கு நிலைகொண்டுள்ளது. உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்து, ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவின் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.