"தமிழரின் உரிமைப் போராட்டம்"கன்னியா தமிழரின் பூர்வீகம் நடக்கப்போவது என்ன?

தென்கயிலை ஆதினம் குருமுதல்வர் அகத்தியர் அடிகளாரின் தலைமையில் நாளை 𝟏𝟔.𝟎𝟕.𝟐𝟎𝟏𝟗ம் திகதி காலை 𝟏𝟏.𝟎𝟎 மணிக்கு கன்னியாவில் இடம்பெறும் பேரினவாதத்தின் மரபுரிமை அழிப்புக்கு எதிரான அடையாளப்படுத்தல் இடம்பெறவுள்ளது.

ஏன் நடக்க வேண்டும்?
கன்னியாவில் பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களத்தின் மூலம் தமிழரின் மரபுரிமை அழிக்கப்பட்டு, கன்னியாவுக்கான தமிழரின் உரிமை பறிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் தமிழரை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகள் அனைத்துக்கும், அவற்றின் முக்கிய உறுப்பினர்களுக்கும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும், தமிழர் தரப்பு அரசியல் அபிலாசைகளை கொண்டவர்களுக்கும் தெரிந்திருக்கும் போதிலும் அவர்களிடமிருந்து எந்தவிதமான தீர்க்கமான முடிவும் வழங்கப்படவில்லை. தற்காலிக முடிவுகள் சமூகத்துக்கு அவர்களால் வெளிக்காட்டப்படும் போதிலும், அவர்களின் செயற்பாடுகள் பேரினவாதத்துக்கு துணை போவதாகவே உள்ளது. 
உதாரணமாக கன்னியா இரண்டு தடவைகள் தொல்பொருள் திணைக்களத்தினால் உடைக்கப்படும் பொழுதிலும் அரசியல் சார்ந்தவர்களால் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் சார்பற்ற இளையோர் களம் இறங்கிய பின்னே நிறுத்தப்படுகின்றது.
அடையாளப்படுத்தல் மூலம் விளையப்போவது_என்ன?
கன்னியா தொடர்பில் நிரந்தரமான தீர்வு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு, தமிழரின் அனைத்து அரசியல் தரப்பையும் கட்டாயப்படுத்தல். அத்துடன் கன்னியா தமிழரின் பூர்விகம் என்பதனை இழக்க திருகோணமலை தமிழர் தயாராக இல்லை என்பதனை உலக தமிழருக்கும், ஏனைய தரப்புகளுக்கும் பிரகடனப்படுத்தல்.
திருகோணமலை தமிழர் எடுக்க வேண்டிய தீர்மானம் என்ன?
கடந்த 𝟑𝟎 வருட கால யுத்தத்தின் மூலம் தமிழர்கள் இழந்தது கொஞ்சம் அல்ல. சொல்லில் அடங்காதது. எனினும் அந்த இழப்பின் மேல் இன்னோரு இழப்பாக கன்னியாவையும் இழந்துவிட்டு, வரலாறு, மரபுரிமை அற்ற ஓர் இனமாக நிற்க போகின்றோமா? அல்லது எமது மூதாதையரும், போராளிகளும் பாதுகாத்து தந்த எமது மரபுரிமையை அடுத்த சந்ததிக்கு பாதுகாத்து கொடுக்க போகின்றோமா? என்பதில் திருகோணமலை தமிழரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதனை உலகுக்கு பிரகடனம் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்.
திருகோணமலை_தமிழரின்_தீர்மானத்தை_எவ்வாறு_உலகுக்கு_வெளிப்படுத்தலாம்?
𝟏𝟔.𝟎𝟕.𝟐𝟎𝟏𝟗ம் திகதி தென்கயிலை ஆதினம் குருமுதல்வர் அகத்தியர் அடிகளாரின் தலைமையில் காலை 𝟏𝟏.𝟎𝟎 மணிக்கு கன்னியாவில் இடம்பெறும் பேரினவாதத்தின் மரபுரிமை அழிப்புக்கு எதிரான அடையாளப்படுத்தலில், திருகோணமலை தமிழர் அனைவரும் தங்களது தனிப்பட்ட அடையாளங்களை துறந்து, மரபுரிமையை கோரும் தமிழராக ஒன்றிணைந்து, அமைதியான வழியில் எமது உரிமை கோரிக்கையை உலகறிய பிரகடனம் செய்தல்.
காலம் - 𝟏𝟔.𝟎𝟕.𝟐𝟎𝟏𝟗(செவ்வாய்க்கிழமை)
நேரம் - 𝟏𝟏.𝟎𝟎 மணி
இடம் - கன்னியா வெந்நீரூற்று
நன்றி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.