போலித்தகவல்கள் சமர்ப்பித்த தொண்டர் ஆசிரியர்கள்!!

வட மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சமர்ப்பித்த உறுதிப்படுத்தல் ஆவணங்கள் போலியானவை என வடமாகாண கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் கடந்த 2015ஆம் ஆண்டிற்கும் முன்பு தொண்டர்களாகப் பணியாற்றிய தொண்டர்களிற்கு திருகோணமலையில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நியமனத்திற்காக வயது எல்லை 50 என அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்தது.

இந் நிலையில், 52 வயதினையுடையவர்கள் 8 பேர் அதில் உள்ளதோடு, அதிபரின் ஒப்பம் போலியாகப் பெற்றவர்கள் 10ற்கும் மேற்பட்டோர் உள்ளதாகவும் வலயத்தின் ஒப்பமும் போலியாகப் பெறப்பட்டதாகவும் கூறி வடமாகாண கல்வி அமைச்சிற்கு முறையிடப்பட்டுள்ளது.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் பாடசாலை அதிபர் கடந்தமுறை தனது பாடசாலையில் தொண்டராசிரியர்களாக பணியாற்றியதாக 14 தொண்டர்களிற்கு கடிதம் வழங்கிய நிலையில் அதே அதிபர் தற்போதும் 11 தொண்டர்களிற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றி தற்போது யாழ்ப்பாணத்தில் தீவகம் ஒன்றின் கல்வி அதிகாரியா பணியாற்றும் ஒருவர் தனது உறவுகளிற்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் கடிதம் வழங்கிய நிலையிலேயே ஆசிரிய நியமனங்களை பெற்றுள்ளனர்.

இந் நிலையில் குறித்த நால்வரும் வன்னியின் பாடசாலையை ஒருநாள்கூட பார்த்ததே கிடையாது எனவும் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வட மாகாணத்தில் வழங்கப்பட்ட நியமனத்தில் மட்டும் 41ஆசிரியர்களிற்கு எதிராக முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் , ஆராய்ந்து உண்மையை கண்டறிந்த பின்பே இவை தொடர்பில் பதிலளிக்க முடியும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.