வடக்கின் பெருமையை கூறும் கிழக்கு இளைஞர்!!

யாழ்ப்பாணம்(வடமாகாணம்) கொடுத்த உறவுகளைப்போல சொந்த ஊரே கொடுக்கல..


மீன் கார அண்ணைல இருந்து பூட் சிற்றி அக்கா ,பத்து ரூபா பரோட்டா நானா ,சாப்பாட்டு கடை அக்கா, போட்டோ கொப்பி கடை அப்பா, தலைமுடி வெட்டுற தம்பி வரை எல்லாமும் உரிமையோட வாழ்வியல இலகுபடுத்திருக்கு...

பார்க்கிற இடமெல்லாம் எங்கட தமிழ்சனம்.. அவ்வளவு கலாச்சாரச்செறிவு... என்ன இருந்தாலும் எங்கடதுகள் என்கிற பாதுகாப்பான உணர்வு...

நல்லூர் கோவில் தேர்ச் சுவரும் சந்நிதி கோவில் தீர்த்தக்கரையும் சுதுமலை அம்மன் கோவில் குளமும் மானிப்பாய் அந்தோனியார் கோவிலும் என்னோட சொந்தக் கதைகள் நிறைய கேட்டிருக்கு...

ஆறுதலுக்கு தோழ்சாய உரிமையாக எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடிய கேட்டுவிடக்கூடிய நட்புகளும் அதிகம்...

படிப்பறிவை தவிர்ந்த வாழ்வியலின் பல துறைகளையும் இலக்கியத்தையும் ஊடகத்தையும் இயக்கத்தையும் போராட்டத்தையும்
அரசியலையும் சமூக வலிகளையும் எனக்கு அறிமுகப்படுத்திய ஊர்...

பரந்தன் விசுவமடு வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் முல்லைத்தீவு சிலாவத்தை  வற்றாப்பளை ஒட்டுசுட்டான் கிளிநொச்சி கனகபுரம் ஊடான பயணங்களின் போதான உரையாடல்களும் கேட்ட கதைகளும் ஒவ்வொரு முறையும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திருக்கு...

எல்லாவற்றையும் விட்டு விலகுதல்
ஒவ்வொருமுறையும் தனிமையை கொடுத்துக்கொண்டிருக்கிறது..
-அஐய்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.