ஓர் ஏழைத்தாயின் கண்ணீர்!!

வயலாடை காற்றில் அசைந்தாட அமைதியாகத் தூங்கத் தொடங்கினாள் கரவையாள் கரவையூரின் புகழ்பூத்த படித்த சனங்களின் நடுவே நாளும் அல்லற்படும் ஓரே அவலத்தாயே வேதா



ஊர் தூங்கத் தொடங்கினாலும் வேதா தூங்கியதை அறிந்திருக்க வாய்ப்பேயில்லை சூரியன் தன் சிறகுலர்த்தி இருளாடை போர்த்தும் அவ்வேளை பொம்பிளைகள் நாளைய உணவுக்காக முசுட்டைக் கொடியும் ஆங்காங்கே கிடந்த பனங்கொட்டைகளையும் பிறுக்கியவாறு இன்னொரு பக்கத்தில் விறகும் ஆட்டுக்குக் குளையுயையும் சுமந்த வாறு நடந்து வந்துகொண்டிருந்தனர் அந்தக் குளக் கரையால்

அந்தச் சனங்களின் காலை நேரக் குளிப்பிற்கு தன்னைத் தினந்தினங் கொடுத்து ஆனந்தித்து வந்தது குளம் பெண்டுகள் வரும் போது நாளாந்த கூலித் தொழிலை முடித்து விட்டு குளிப்பதற்காக குளக்கட்டில் நின்று ஊர்ப் புதினங்களையும் உலகப் புதினங்களையும் அலைபாய விட்டு குளத்துக்குள் இறங்கி நீராடும் போது உடம்பூச் சூட்டின் பூட்டு மெல்ல மெல்லத் திறக்கும் இப்படியாக ஒவ்வொரு காலை மாலையும் கரைந்துருகுங் கரவையூரின் ஏழைத் தாயே வேதா

எல்லாப் பெண்களும் வந்த பின்னர் எங்கோ மூலையி பையப் பைய தன் நடையுடன் தானே பேசியவாறு கம்பீரமான நடையுடன் வருவாள் வரும் போதே வீட்டே எனது பிள்ளைகள் உண்டனரோ உடுத்தினரோ நாளைக்கு சாப்பாட்டுக்கு ஏன்ன செய்ய என கேள்விகள் ஆயிரம் தலைக்கு மேல்

தலைக்கு மேலிருக்கும் விறகை விட பிள்ளைகள் மீதான கேள்விகளே அவளுக்கு பாராமாயிருக்கும் அன்றும் அப்படித்தான் அந்தப் பாரத்துடன் வந்தவள் அவசர அவசரமாய் விறகை இறக்கி சாணாத்தைக் குவித்த பின்னர் குளாத்துக்கு ஓடினாள் சூட்டின் கதவுகளைத் திறந்தாள் குளிர்நீரினால் கிராமத்து ஏழைகளுக்கு குளமும் வயலும் காடும் தாய் மட்டுமல்ல நல்ல மருந்தும் கூட ஆயிரங் கவலைகளைக் களையும் திறந்த வேளி சொர்க்கமும் கூட என அவள் நினைக்கத் தவறுவதில்லை
குளிரில் சூட்டின் கதவுகளைத் திறந்தாலும்மனச் சூட்டின் கதவுகளைத் திறக்க முடிவதில்லை

ஒன்றா இரண்டா பத்துப் பிள்ளைகளைப் பெத்த பத்தினி அல்லவா வேதா அதிலும் தனது இரு பிள்ளைகளைத் தேசத்துக்காக கொடுத்து விட்டு சிறகறுந்த பறவையாய்த் தவிக்கும் ஏழை அரசி அல்லவா அவள்

இருளின் போர்வையைக் கிழித்து குளித்து முடித்த பின் முருகன் கோயிலை நோக்கி நடக்கிறாள் நடையும் அவளும்  நல்ல நண்பர்கள் நடக்கும் போதே அவள் சிவ புராணத்தையும் திருப்புகழையும் கண்ணதாசனின் தத்துவப்பாடல்களையும் பாட மறப்பதில்லை
அவளைப் போலாவே வேறு பல பெண்களும் பாடிப் பாடித்
தன் பாடுகள் மறப்பது வழமை

முருகனை வழிபட்டு விபூதீயை வரிவரியாய் தன் நெற்றியில் கோடிட்டு மங்கலகரமாய் காட்சியளிப்பாள் வேதா ஒரு நிலவுக்கு வாயிருந்தால் கண்ணிருந்தால் காதிருந்தால் எப்படிப் புன்னகைக்குமோ அப்படிப் புன்னகைத்து குழந்தைகளுடன் செல்லம் பொழிவாள் வேதா

அன்று இரவும் அப்படித்தான் மூன்று கல்லடிப்பில் குந்தியிருந்து தோசையைச் சுட ஆசை ஆசையாய் அடுப்பருகே குந்தினாள் தன் பூப்போன்ற வாயால் உவ் உவ் என ஊதியவாறு அடுப்புடன் போரிட்டாள் வேதா
சூட்டின் மத்தியிலும் சுகத்தையே உணர்ந்தாள் வேதா
ஏனெனில் ஒன்றா இரண்டா பத்துப் பெத்த பத்தினி அல்லவா அவள் இரண்டு பிள்ளைகள் போக மீதீ எட்டும் அம்மா!அம்மா!எனக்கு எண்ணைத் தோசை எனக்கு! எனக்கு என மொய்த்தவாறு சொற்றி யிருந்து ரகளை செய்தனர் பிள்ளைகன் அன்புச் சண்டையில் உலகின் கறைபடிந்த பக்கங்களை மறந்து சுகத்தைச் சுவைத்துத் தின்றாள் வேதா

படலை திறந்து கேட்டது
யாரோ யேய் வேச வாடி வெளியால!எனக் கர்ச்சித்தவாறு அடுப்படியை நெருங்கினர் சிங்களன் தமிழனை எப்படியெல்லாம் இரக்கமற்று அழித்தானோ அது போல் ஒரு ஆக்கிரமிப்பு

கிபிரைக் கண்டவுடன் பாடசாலைப் பிள்ளைகள் எப்படியெல்லாம் விழுந்ததிடித்து ஓடீயொழிவரோ அப்படி ஒரு ஆக்கிரமிப்பு

பருந்தைக் கண்டதும் கோழிக்குஞ் சுகள் எப்படிப் பதறுமோ அப்படி ஒரு ஆக்கிரமிப்பு

ஆனால் அந்தக் குஞ்சுகளைக் காக்க கோழியுண்டு இந்தக் குஞ்சுகளைக் காக்க யாருண்டு

ஏழை அரசியான வேதாவும் அந்தக் குடிகாரக் கணவன் முன் ஒரு குஞ்சுதான் ஆசை ஆசையாய் ஊண்ணைத் தோசை சுட்ட அவளின் எண்ணங்கள் வெறுமையாய் எரிய
அவள் கால்களைப் பிடித்த கணவன் கொற கொறவென இழுத்தான் அவளும் என்ன விடடா விடடா எனக் கத்தினாள் பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடி ஒழித்து என்ர அம்மா என்ர அம்மா எனக் கத்தினர்

எண்ணை பொங்கி வழிய தோசை கருகியது அதைப் போல் பிள்ளைகளின் இருதயமும் கருகியது "நீ துண்டோடயும் துணியோடையுந் தானேடி வந்தனி!என ஏதோ எல்லாஞ் சொல்லிச் சொல்லி தந்தை தாயை அடிப்பதைக் கண்ட பிள்ளைகளின் மனங்களில் ஆயிரம் றௌடிகள் வில்லர்கள் சண்டியர்கள் முளைவிடத் தொடங்கினர் ஆனாலுமென்ன இந்தச் சின்ன உடலை வைத்து அப்பனுக்கு எப்படி அடிப்பது என பயத்துடன் போரிட்டடனர்

அந்த அழகிய நிலா கருவானத்துள் தன்னளகை இழப்பதைப்போல வேதவின் முகம் நெருப்பில்
கருகியது முடி நெருப்பில் எரிந்தது விறகுக் கட்டையினால் அவள் பற்கள் நொறுங்கியது தன் தாயின் அன்பான முகம் நெருப்பில் எரிந்ததைப் பார்த்த கடசி மகன் சிவராமன் மனதளவில் பாதிப்புக் குள்ளாகினான்

காதலித்துக் கைப்பிடித்த பெண்ணை ஒரு ஆண் இப்படியுமா நடத்துவான் ஆயிரம் கவிதைகள் முழைத்தது அவனுக்குள் ஆயிரமாயிரம் புரட்சியாளர்கள் கிளர்ந்தெழுந்தனர் அவனுக்குள்

தாயின் அவலமான அந்த முகத்தைப் பார்க்காது வீட்டை விட்டு வெளியேறினான் சிவராமன் ஊரிலூள்ளோர் தேடினர் தவித்தனர் வேதாவை வீதிவீதியாய் போட்டிழுத்து அடித்து அவமானப்படுத்தி விட்டு கணவனும் தலைமறைவானான்

வைத்திய சாலை சென்று வந்த வேதாவை எல்லாப்ள்ளைகளும் கட்டி அணைத்து அழுவதைப் பார்த்து கரவை ஊரே அழுதது ஆனாலும் வேடிக்கை நையாண்டி செய்வோரும் கறுத்தாடு போல் நிற்பதைக் கண்டாள் வேதா

எதையுமே கவலைப் படாதவளாய் தன் பிள்ளையைத் தேடச் சென்றாள் தன் தாய் செய்த அதே வேலையைச் செய்தான் சிவராமல் பிள்ளையார் கோயிலில் கொடுக்கும் அமுதை வாங்கி உண்டுவிட்டு குளத்தில் குளித்துவிட்டு பற்றைக்குள் ஆடை மாற்றிவிட்டு காட்டுக்குள் மலசலங் கழித்துவிட்டு வயல் வயலாக தாயை நினைத்து அழூத படி சாணாம் பொறிக்கினான்

இதைப் பார்த்த வேதா அதிர்ந்து போனாள் மறுபடியும் படிக்குமாறு கெஞ்சினாள் தான் 5ஆம் ஆண்டு படிக்கும் போது தன் தாய் இறந்ததாகவும் பின்னர் தன்னை சமைப்பதற்காக வீட்டே இருக்குமாறு கூறிய. அண்ணன் தனது அடுத்த தங்கையைக் கொஸ்ரலில் விட்டுப் படிப்பித்ததாகவும் வாழ்வு பற்றிய அறிவின்மையால் தான் உனது அப்பாவுடன் காதல் திருமணம் செய்ததாகழும் இதையே  காரணங் காட்டி தனதூ அண்ணன் இன்று வரை கதைப்பதில்லையென்றும் இத்தனை துயருக்கும் தான் படிக்காமல் எடுத் த முடிவே காரணமெனவும் கூறுன்றாள்

இத்தனை நாளும் இந்த வரலாறு தெரியாத சிவராமனுக்குள் ஒரு இலட்சிய நெருப்பு கொழுந்துவிட்டு எரியாத் தொடங்கியது

இப்போது அவனும் தாயுடன் நாவல்ப்பழம் பொறுக்கச் செல்கிறான் ஆடு மேய்ப்பதற்கும் சாணம் அள்ளுவதற்கும் செல்கிறான் ஊத்தை உடுப்புடன் செல்லும் அவனை அயலவாரும் மிணவரும் ஏளனஞ் செய்கின்றனர் ஒடுக்குகின்றனர்
யாருக்கும் தெரியாம ல் இரவில் குளிப்பதும் சாணாம் ஆட்டுப்புழுக்கை நாவற்பழம் விறகு விற்ற காசில் ரூசன் காசு கட்டுவதும் கவலை வரும் போது முருகன் கோயிலைப் பெருக்குவதும் தன் சேலைத் தலைப்பில் சில்லறைகளை முடிந்து வைப்பதுமாக நாட்கள் நகர்ந்தன

தன் மகனைச் சூரியனாகக் கனவுகண்டாள் வேதா இருள் சூழ்ந்த வேதாவின் வாழ்வில் சூரியன் தன் தண்ணொளியைப் பாய்ச்சத் தொடங்கினாள்

ஒரு நாள்க் காலை வழமை போல் வேதா வசீகரப் ன்னகையுடன் பூத்துக் குலுங்கும் அன்பு வார்த்தைகளைத் தூவிவிட்டு நாளாந்த கடமைக்குச் செல்லத் தலைப்பட்டாள்

அச்சமயம் படலை திறந்தது டமாரெனச் சத்தங் கேட்டது
மறுபடியும் சிங்கம் கிபிர் பருந்துகளா
ஒரு கணம் இருதயந் துடிக்க மறத்தது
அந்தக் குடிகார ...........வாய் குரலை இறைக்க மறுத்தது

எரிமலையாக வெடித்துச் சிதறிய அவள்களின் இதயம் பசுஞ் சோலையாகப் பூத்துக் குலுங்கத் தொடங்கியது

அது நான் சீனியப்பா வென நெற்றியில் மூன்று குறி வெள்ளை வேட்டி வெள்ளை நிறப் புன்னகை இத்தனை இலட்சணங்களையும் தன்னுள் கொண்டவர் வாயில் நல்ல சேதியைத் தானே கொண்டருவார்

ஆம் அழைத்தார்

பிள்ளை வேதா! வேதா!

ஆ அப்பு வாங்கோ!

நிலாமுகத்துடன் புன்னகை சிதற குழந்தைத்தனத்தை அணிந்தபடி வந்த வேதா"இருங்கோ சீனி அப்பு என்ன விசயம் கன நாளைக்குப் பிறகு....."

ஓ மடீ பிள்ளை அது கிடக்கட்டும்
நீயும் முருகனெட்ட அழூறத நானும் பார்க்கிறன் தான் இந்த வயசு போன கிழவனால என்னத் செய்ய
ஆனால் எங்கட முருகன் உன்னக் கைவிடேல்ல பிள்ளை......"

என்றார்
என்னண சொல்லுற அப்பு

!அடி பிள்ள வேதி
நேற்று இரவு உவன் என்ர மருமோன்காரன் மணியம் தெரிமெல்லே உனக்கு.......... என்றார்

வேதாவோ ஓ மோம் தெரியும் அதற்கு

என இழுக்கையில்
அப்புவோ என்ன அதற்கோ அவன்தான் சொன்னான் உந்த றேடியோப்பெட்டீல சொன்னதாம் யாழ்மாவட்டத்திலேயே விஞ்ஞானப் பிரிவில சிவராமல் முதலாமிடமெண்டு என்னாலையும் நம்பேலாம போச்சு அதான்ரி பிள்ளை சொல்லிட்டு போவமெண்டு

அப்ப ஏல் றிசல்ட் வந்திட்டே எனக் கேட்ட வேதாவின் கண்காளில் கண்ணீர் கொஞ்சநேரம் சிலையாகிப் போனாள்

சிவராமனை கட்டி அணைத்தாள் முத்தங்களை வாரி இறைத்தில் பல்லு இல்லாவிட்டிலும் சொக்கு இடிந்து போனாலும் கண்கள் சுருங்கியிருந்தாலும் பழைய நிலாவாக புரட்சித் தாயிகத் தெரிந்தாள் வேதா சிவராமனின் கண்களுக்கு

உடனே வேதா சொன்னாள் சிவா சீனிக்குட்டி அப்புவெட்ட ஆசீர்வாதம் வாங்கப்பு

சிவாவின் கண்களில் கண்ணீர் அந்த நல்ல சேதி சொன்ன சீனிக்குட்டியாரின் கால்களை தரிசித்தான்

உடனே ஓடினான்
கொப்பியைத் திறந்தான்

பிடுங்கப்பட்ட முடியில்
உடைக்கப்பட்ட பற்களில்
நொறுங்கிப் போகவில்லை அவளின் பிள்ளைப் பாசம்

சூரியனை ஈன்றுவிட்டேன் என்ற தவிப்பில்
அவள் திமிராய்த்தான் நடப்பாள்
இன்று அந்த வீட்டுக் கண்ணாடியைத்துடைக்கும்
வெள்ளைக் கொக்குகளும் காழான்களும்
ஏராளம்
ஆனால் அவள் சிவபுராணத்தை இசைப்பதை இன்றும் நிறுத்தவில்லை

முருகன் கோயிலைப் பெருக்கும் போதும் உறங்கும் போதும்
சில்லறைகளும் அவளுடனேயே உறங்குகின்றன

என ஒரு கவிதையை எழுதிக் காட்டினான்

சீனிக்குட்டி அப்பு பார்த்து அதிர்ச்சி அடைந்தார் "வேதா நீ ஒரு வைத்தியனை மட்டுமல்ல கவிஞானையும் பெற்றுவிட்டாய் இவனொருநாள் ஒப்பற்ற பிறவியாய்ப் போற்றப்படுவேனெனக் கூறிச் சென்றார்

வருடங்கள் ஆறு கடந்தது இறந்த சீனிக் குட்டி அப்புவின் நினைவால் ஒரு இலவச வைத்தியப் பணியை செய்துவந்தான் டொக்டர் சிவராமன்

அன்று அவன் தாயை வீதி வீதியாய் குடிகாரத் தந்தை இழுத்து இழுத்து அடிக்கும் போது வேடிக்கை பார்த்தவர்களில் நையாண்டி செய்தவர்களில் பலர் இன்று இலவச சிகிச்சை பெறுகின்றனர்

சிலர் வேலையும் பார்க்கின்றனர்

அவன் யாவரையும் மன்னித்துவிட்டான்
இப்படீயே நாட்கள் நகர வைத்திய சாலை யைக் கூட்டித் துடைக்க ஒரு வேலையாள் தேவையெனக் கேட்டிருந்தார்கள் இப்போது வேலையாளைக் கூட்டி வந்தார்கள்

தாதியர்கள்

மறுபடியும் ஒரு அதிர்ச்சி

வேலைக்கு வந்தது பலவருடங்களின் முன் பத்துப்பிள்ளை பத்தினியை வேசையென்ற பட்டத்துடன் நடுவீதியில் விட்டுச் சென்ற ஆண்

நெருப்பில் எரியும் முடியை உடைக்கப்பட்ட பல்லை ரசித்த ஆண்

எல்லோரையும் மன்னித்த சிவராமன் இவரை மன்னிப்பான

ஒரு குழந்தையாகி அழுதபடிதன் காரில் புறப்பட் அம்மாவிடஞ் சென்றான்

காலம் சிரித்தபடி தோன்றி மறைந்தது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.