பரீட்சைகள் நடைபெறவிருப்பதால் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!!

கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் நடத்துவதை எதிர்வரும் 30 திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கும் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைபெறவிருக்கும் பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே தனி நபரோ அல்லது நிறுவனமோ தடை உத்தரவை மீறி மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.