வவுனியா விதை உற்பத்தி பண்ணையில் பாரிய தீ!

விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வவுனியா அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில், பாரிய தீவிபத்து ஒன்று,  நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


வவுனியா ஏ9 வீதிக்கு அருகாமையில் இருக்கும் குறித்த விதை உற்பத்திப் பண்ணை வளாகத்தில் இருக்கும் வயல் நிலங்களில் திடீரென ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, வயல் நிலங்கள் தீக்கிரையாகின. தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புகை காரணமாக, ஏ9 வீதியில் சிறிதுநேரம் பயணத்தடை ஏற்பட்டது.

சிறுபோக அறுவடையின் பின்னரான காலப்பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டதால், பாரிய அழிவுகள் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா தீயணைப்புப் பிரிவினர், சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.