நவீன ஆயுதங்களை அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது!!
ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்கா நவீன ரக ஆயுதமொன்றை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு எதிராக மரைன் படையணியின் எல்.எம்.ஏ.டி.ஐ.எஸ் என்ற ஆயுதமே ஈரானின் ஆளில்லா விமானத்தை செயலிழக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆயுதம், அனைத்து வகையான வாகனங்களிலும் பொருத்தி பயன்படுத்தக்கூடியதும் அமெரிக்கக் கப்பல்களில் இருந்து எதிரி விமானங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடியதுமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த மரைன் படைப்பிரிவின் விசேட படையணியொன்று இந்த வகை ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
2,200 பேரைக் கொண்ட இந்த படையணி தற்போது அமெரிக்காவின் கடற்படை கப்பலான யு.எஸ் பொக்சரில் உள்ள விசேட படையணியொன்றுடன் இணைந்து செயற்படுகின்றது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட வகை ஆயுதத்தை நிலத்திலேயே பயன்படுத்துவது வழமை எனினும் தற்போது பல கப்பல்களில் பொருத்தி அமெரிக்கா பரிசோதனை செய்கின்றது என அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஆயுதத்தினால் ராடர்கள் மற்றும் கமெராக்களைப் பயன்படுத்தி வான்வெளியில் பறக்கும் விமானங்களை கண்காணிக்க முடியும் என்பதுடன் எதிரி விமானங்களை தனியாக அடையாளங்காணும் திறனும் இவ்வகை ஆயுதங்களுக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை