சமந்தா படத்தை வாங்க சீன நிறுவனம் தீவிரம்!

சமந்தா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஓ பேபி . 2014 -இல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படமான‌ 'மிஸ் கிராணி' படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை BV நந்தினி ரெட்டி  இயக்கத்தில், சுனிதா டாடி தயாரித்துள்ளார்.


இத்திரைப்படத்தில் நடிகை லட்சுமி, ராவ் ரமேஷ் , நாகா சௌர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 70 வயதான பாட்டி லட்சுமி, 25 வயது சமந்தாவாக மாறிய பின் நடக்கும் சுவராஸ்யமான நிகழ்வுகள் தான் இந்த படத்தின் கதை.  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படம் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் கதை பிடித்து போனதால் சீனாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை வாங்க மும்மரம் காட்டி வருவதாக தெரிகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.