சுவிஸ் ஆதரவு அமைப்பு வருடாந்த பொதுக்கூட்டம்!📷

சுவிஸ் ஆதரவு அமைப்பு தனது 5வது வருடத்தை கடந்திருக்கிறது. இதற்காக சந்திப்பு நிகழ்வு இடம்பெற்றது.போர்ப்பட்ட சமூகத்தின் தேவைகள் குவிந்துபோய் இருக்கின்றன. பல்வேறுபட்ட சுயமான அமைப்புகளின் தோற்றமும் வெவ்வேறு வகைப்பட்ட தேவைகளை இலக்காகக் கொண்டு இயங்குகிற அவற்றின் செயற்பாடுகளும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பங்கை வகிக்க வல்லவை. அவ்வாறான வேறு பல அமைப்புகளும் இயங்குகின்றன என்பது உண்மை. நிறுவனமயப்படாமல் அவர்கள் இயங்கினால் நல்ல விசயம். அந்த இயங்குமுறையில்தான் -பெருமளவு நிர்வாகச் செலவை விழுங்கி ஏப்பம் விடுகிற அமைப்பாக இயங்காமல்- பயனாளர்களை பெரும்பகுதி நிதி சென்றடையத்தக்கவாறு இயங்குதல் சாத்தியமாகும்.

ஆதரவு அமைப்பைப் பொறுத்தளவில் பயனாளர்கள் அவர்கள் தேர்ச்சிபெற்ற அல்லது தேர்வுசெய்த சுயதொழிலை உருவாக்கிக் கொடுப்பதும் படிப்படியாக அதன்வழி அவர்கள் முன்னேறி தமது வாழ்வாதாரத்தை அதற்குள்ளால் உருவாக்கிக்கொண்டு வாழ்வதுமே எமது வரையறைக்குள்ளான செயற்பாடு. அதாவது அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்க கைகொடுத்து வழிகாட்டிவிடுவதுதான் எமது நோக்கம்.

வியாபாரம் (துணி, பலசரக்கு, மீன்) உட்பட வெல்டிங், தையல், விவசாயம், கால்நடை வளர்ப்பு, புகைப்படக் கலை, சலூன், கதிரை வாடகைக்கு கொடுத்தல், வாகனத்துக்கு வர்ணம் பூசுதல், மீன்பிடி, லாண்ட் மாஸ்ரர் (Land master) மூலமான தொழில், சிப்ஸ் குடிசை ஆலை… என பல வகைப்பட்ட சுயதொழில்களுக்கு எமது ஆதரவு அமைப்பு உதவியிருக்கிறது....

மக்களை எப்போதுமே கையேந்துபவர்களாக வைத்துக்கொண்டு பல உதவிநிறுவனங்கள் (NGO) தொழில் நிறுவனம்போல் செயற்படுகிற நிலை அந்த மக்களை ஏழ்மை நிலையிலேயே இருக்கக் கோருகிற ஒன்று. அதுவே அந்த உதவி நிறுவனங்களின் வாழ்வுக்கும் பிழைப்புக்கும் அவசியமானது. இதை மறுத்து மாற்று பாதையில் செயற்படுவதே எமது “ஆதரவு” அமைப்பின் வேலைமுறை. சேர்க்கப்படுகின்ற நிதியின் பெரும் பகுதியை நிர்வாகச் செலவுக்குள் முழுங்கிவிட்டு ஒரு சிறு பகுதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு -கமரா சாட்சியாக- வழங்குகிற உதவிநிறுவனங்களின் வேலைமுறையோடு ஒத்துவராத அமைப்பு ஆதரவு அமைப்பு.Read 

No comments

Powered by Blogger.