கொழும்பு - கண்டி பிரதான வீதியில் தாக்குதல் நடத்திய இருவர் கைது!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் வாகன சாரதி மீது பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மத்துகமவை சேர்ந்த ஹெவேஜ் காமினி விஜேசூரியா மற்றும் பொலன்னறுவ, அரலகன்விலவைச் சேர்ந்த சுசந்தா பண்டாரா ஆகியோர் தற்போது கொழும்பு குற்றப்பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தாக்குதல் நடத்தியவர்கள் பயணித்த டிபெண்டர் வாகனம் மகரகமவின் எல்ஹெனா வீதியில்யில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொலிசாரால் மீட்கப்பட்டது.

தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் ஒருவர் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, முந்திச் சென்று மறித்த பிரமுகர் பாதுகாப்பு பிரிவு டிபெண்டர் வாகனமொன்றிலிருந்தவர்கள், ஆசிரியரை தாக்கியிருந்தனர். ஆசிரியர் நேற்று காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.