அடுத்து அமையும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட தயார்- அமெரிக்க தூதுவர்!

இலங்கையில் அடுத்த தேர்தலில் அமைக்கப்படும் எந்தவொரு அரசாங்கத்துடனும் புரிந்துணர்வுடன் செயற்பட அமெரிக்கா தயாராக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ் தெரிவித்துள்ளார்.


எந்தக் கட்சி அல்லது எந்த நபர் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை அரசாங்கத்துடனும், இலங்கை மக்களுடனும் அமெரிக்க அரசாங்கம் முன்னெடுத்துவரும் தொடர்புகளுக்கு எந்தவகையிலும் பாதிப்பு வராத வகையில் தாம் செயற்பட தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதைய இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவி வரும் தொடர்பு தொடர்பில் பல தரப்பிலும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கைக்குள் அமெரிக்காவின் படை முகாம் ஒன்றை அமைக்கவோ, அல்லது எந்தவித இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும் தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.