சீனாவில் பயங்கர வெடி விபத்து!!

சீனாவில் இடம்பெற்ற பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


சீனாவிலுள்ள எரிவாயு கிடங்கில் நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கிடங்கில் இருந்த பொருட்கள் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடி விபத்தில் சிக்கி 19 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ஐவர் பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.