நினைவுத்தூபி அமைப்பதை தடுக்கும் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் இருவர்!

போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்டதன் சாட்சியான மந்துவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவான நினைவுத்தூபி அமைப்பதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள் தடையாக உள்ளதாக மந்துவில் படுகொலையில் உயிரிழந்த மக்களின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

மந்துவில் பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காப்படையினரின் விமான தாக்குதலில் 24 மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த மக்களின் நினைவான வணக்க நிகழ்வுகள் கடந்த காலங்களில் போரின் பின்னர்  நினைவிற்கொள்ளப்பட்டு வந்துள்ளன இன்னிலையில் கடந்த ஆண்டு குறித்த பகுதியில் நினைவுத்தூபி அமைத்து வழிபட பாதிக்கப்பட்ட உறவுகளை இழந்த மக்கள் விருப்பம் கொண்டுள்ளார்கள்.
இந்த ஆண்டு மந்துவில் பகுதியில் தூபி அமைத்து நிகழ்வு கொண்டாடுவதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள் தடையாக இருக்கின்றார்கள் உறவுகைள இழந்த நாங்கள் இன்று நினைவுத்தூபி கட்டி ஒவ்வொரு ஆண்டும் நினைவிற்கொள்வதற்கு ஏன் தடைவிதித்துள்ளார்கள்
இதனையிட்டு நாங்கள் வேதனையடைகின்றோம்  பாதிக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் நினைவுநாட்களில் அந்த இடத்தில் அழுதுவிட்டு வருவதற்கு ஏன் தடைசெய்கின்றீர்கள்.என்று மந்துவில் பகுதியில் விமானத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.