தபால் தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!!

சுகயீன விடுமுறை போராட்டத்தில்  ஈடுபடுவதற்கு தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.


அதற்கமைய இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

நியமனங்கள் குறித்து எழுந்த பிரச்சினைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகள் இதுவரை பெற்றுக்கொடுக்காமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் 16 நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதற்கு இணங்க, தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், அதனை அமைச்சரவையின் அனுமதியுடன் ஜூலை மாதம் முதல் அமுல்படுத்துமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தபால் தொலைத்தொடர்பு சேவையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இதுவரை தமது பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் இன்று நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.