கதிரையும் தமிழ் தலைமைகளின் ஆசையும்!!

ஒவ்வொரு மாலைப் பொழுதும் அவனுக்கு சொர்க்கம் பிறக்கிறதாய் இருக்கும் அந்த மாலையில்தான் அவன் அவளைக் காண்கிறான் அவன் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குள் வந்ததும் பார்த்த அதிசயங்களில் அதுவுமொன்று அது இன்றுவரை அவனை விட்டு விலகியதில்லை


யாழ்ப்பாணத்தின் கிராமத் தெருக்களின் மார்புப் பிடியோடு சேலைகட்டிய ஆச்சியரையும் கால்முட்டநீளப் பாவாடை சட்டை அணிந்த பெண்களையுந்தான் பார்த்திருந்தான் அது அவர்களின் அடக்கத்தின் அடையாளமாய்த்தான் இருந்திருக்க வேண்டும்

இன்று வன்னியில் பார்க்கும் பெண்களின் உடை அதுவல்லவே அது ஒரு புரட்சியின் குறியீடு புன்னகையின் மறுவடிவம்
சோம்பலை முறிக்கும் சொர்க்கத்துக் கவசம் சுத்தத்தின் றுபெயர் ஒரு வீடுதலையின் அடையாளம்

அப்படி ஒரு அழகிய உடையுடன்தான் அவன் தமிழைப் பார்த்தான் அவள் கூந்தலில் ஆயிரங் கவிதை செய்ய எண்னான் அவளைப் பார்த்தவுடன் டப்பென்று அவன் இதயம் அவள் கூந்தலில் ஏறிக் குந்தியது அன்றிலிருந்து தமிழைப் பார்ப்பதற்காய் தனது கடமையை இரவுக்கு மாற்றினான்

அவன் வேலை செய்யும் அலுவலகத்தின் நிலமைகளை ஆராய்வதற்காய் அனுப்பப்பட்ட இரு பெண் போராளிகளில் தமிழும் ஒருத்தி

அவளைப் பார்ப்பதற்காய் அவன் கண்கள் தவியாய்த் தவிக்கும் ஒழுக்கம் கட்டுப்பாடென்று ஓதிக்கொண்டிருக்கும் பொறுப்பாளரறிந்தால் அவனுக்கு வேலை போய்விடும் அதைக் காட்டிலும் தமிழுக்கு பணிஸ்மன் கிடைத்திடும் என்பதால் தனது காதலை தனக்குள்ளே பூட்டி வைத்தான்

யுத்த மேகங்களும் ரத்த மேகங்களும் பச்சைக் கிளிகளின் சிறகு கிளிக்க சனம் தரும புரம் நோக்கி நகரத் தொடங்கினர்

அவன் இருதயத்தில் யுத்த மேகங்களின் வெருட்டல் துளிகூட இல்லை தமிழைப் பார்க்கும் போது அவனுக்குள் ஒரு குட்டி ராணி முளைவிட்டு வாழத் தலைப் படுவதாய் எண்ணம்

தனது கூந்தலை வாரிப் பின்னி இடுப்புப் பட்டியை அணிந்து அழகிய பாதத்தைச் சுற்றிய சப்பாத்துடன் தமிழ் நடந்து வருகையில் தாரகைகள் வானத்திலிருந்து கழன்று விழுந்து தமிழின் கூந்தல் மீது பூக்களாய்ச் சிரிப்பது போல் ஒரு கற்பனை அவனுக்குள்

நாட்கள் நகர நகர கற்பனைப் பாயை விரித்து விட்டு முழு நாளும் படுக்கத் தொடங்கினான் இப்போது அவன் ஒரு முழுநேரக் காதலன் தமிழையும் தேசத்தையுமாக காதலித்துக் கனவுகண்டிருந்தவன் திடீரென

டும் டும் என்ற சத்தத்தைக் கேட்டு ஓடிச் செல்கிறான் சனம் இடம்பெயந்து வந்து கொண்டேயிருந்தனர்

கிளிநொச்சிக்கு ஆமி வந்திட்டானாம் செய்திகள் மாறி மாறி மனத்தை உடைத்துக் கொண்டிருக்கஎந்த நேரமும் எதற்கும் தயாராக
இருக்க வேண்டுமென எல்லோருக்குஞ் சொல்லப்பட்டது

மறு நாள் ராஜ நடையுடன் அதே அழகிய புன்னகையுடன் தமிழ் அனைவருக்கும் இனிப்புப் பண்டங்களைக் கொடுத்தபடியிருந்தாள் எல்லோரும் அளவளாவித் தமிழுடன் பேசி கட்டி அணைத்து வழி அனூப்பினர் தமிழ் தனக்கேயுரிய வாகனத்திலேறி விடைபெற்றாள் அவள் விடைபெறும் தறுவாயில் நுழைகிறான் அவன் என்றுமில் லாதவாறு புன்னகை கையசைப்புடன்
கலைந்து சென்றாள் தமிழ்

அவன் காதல் அவனுக்குள்ளே கிடந்து அழுதது ஒரு பொழுதுமில்லாத கையசைப்பு புன்னகை எல்லாம் எதற்கு ஆச்சரியம் பீறிட்டது ஓடினான் அலுவலகத்திலுள்ளோரை விசாரித்தான் எல்லோரும் தமிழின் பிறந்த நாள் எனப்பதிலளித்தனர்

ஏதோ ஒன்று அவனுக்குள் உழலத் தொடங்கியது தமிழ் எப்போதும் அமரும் கதிரையை யாருக்கும் தெரியாது எடுத்து தனது அறைக்குள் பதுக்கினான் தமிழின் நினைவுகள் வரும்போதெல்லாம் தமிழுடன் வாழ்ந்ததாக கனவுகண்டு தனது நெஞ்சுக்குள் ளிருந்து எடுத்த ஆசைகளை வரையத் தொடங்குவான்

ஆசைகள் வரையும் அதே இடத்தை ஆமி நெருங்கிக் கொண்டிருக்க தனது ஆடையால் அந்தக் கதிரையைச் சுற்றிக் கட்டி பங்கருக்குள் வைத்து விட்டு சனத்தோடு சனமாய் நடக்கத் தொடங்கினான்

மாதங்களோட மாத்தளனை நெருங்கினான் பார்க்கும் போராளிகள் யாவரும் தமிழைப் போலவே காட்சியளித்தனர் வீரச்சாவடைந்த சில போளிகளின் உருக்குலைந்த வித்துடலைப் பார்த்து தமிழ் தமிழெனப் பயித்தியம்பிடித்தவனாய் அழுது கொண்டிருந்தான் பெண் போராளிகள் அணி அணியாய் சென்றனர் யுத்த மேகங்கள் பூமியைத் தின்னத் துடித்தபடியிருக்க

அந்த அணியினுளிருந்த தமிழ் அவனைக் கண்டு கத்திக் கதறி அழைத்தாள் எங்கிருந்தோவந்த செல்லடியில் புகைமண்டலமாகியது மாத்தளன் இரண்டாவது தடவையும் தமிழைச் சந்திக் வைக்கவில்லை காலம்

இரண்டு மாத சுயநினைவு கலைய எழுந்து பார்த்தான் அவன்

இனியவன்!இனியயோயன்!எனத் தமிழ் அழைத்தபடி நின்றாள்

அதே வரி உடை
அதே இடுப்புப் பட்டி
அதே கம்பீரம்
அதே புன்னகை
அதே காதல்

தமிழ் தமிழ் என அழைத்தவாறு வாட்டிலிருந்து ஓடினான்

தாதியர்கள் தடுத்து நிறுத்த சுற்றும் முற்றும் பார்த்தான் வவுனியா மெண்டல் யுனிற் வளாகமென எழுதப்பட்டிருந்தது

மீளவும்

தமிழ் வந்தாள்
இனியவன்!இனியவன்!

அழைத்தாள்

மீளவும் ஓடினான்

காலங்கள் கரைபுரண்டோட அனைத்தையும் சிந்திக்கத் தொடங்கினான்

சிலமாங்களின் பின் விடுதலை செய்யப்பட்டவன் அந்தக் கதிரையைத் தேடத் தொடங்கினான் அனைத்தும் ஒரே வெளியாகத் தெரிந்தது கதிரை வைத்ததற்கான எந்த அடையாளமும் இல்லை

ஆனாலும் அவன் தேடிக்கொண்டேயிருக்கிறான் கதிரை கிடைக்குமா தமிழ் கிடைப்பாளா காலம் எல்லாவற்றுக்கும் ஒரு பதிலை வைத்திருக்குமல்லவா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.