வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழாவிற்கு ஆரம்ப பணிகள் இடம்பெறதொடங்கியுள்ளன.!📷

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மாதம் ஓகஸ்ட் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.



இந்நிலையில் திருவிழாவிற்கு ஆரம்ப பணிகள் இடம்பெறதொடங்கியுள்ளன. தற்போது தண்ணீர்பந்தல்கள் அமைக்கப்படுவதுடன் மற்றும் சேவல் கொடி என்பன ஆலய வளாகத்தை சுற்றி கட்டும் வேலைகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை ஆலய திருவிழாக்கள் வழமை போன்று இடம்பெறும் எனவும். சுவாமி வெளிவீதி உலா மற்றும் தேர்திருவிழாவும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்பு நல்லூர் கந்தன் வெளிவீதி வரமாட்டார் என சில இணையத்தளங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியானதுடன் முகப்பு புத்தகத்திலும் பரப்பப்ட்டன எனினும் இதில் உண்மை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கோயிலில் இருந்து அரை கிலோமீற்றர் தூரத்திற்கு கடை தொகுதிகள் இருக்காதென கூறப்படும் நிலையில் இது குறித்து #யாழ்ப்பாண மாநகர சபையில் விரைவில் கூட்டம் இடம்பெற்று இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.