தாயகம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை!!

வெளிநாட்டில் இருந்து சென்றவர்களுடைய வீட்டில் பணம், நகைகளை கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய், டச்சு வீதியில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

30 பவுண் நகைகள், 600 யூரோ, மற்றும், 50 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களது உறவினர்களுடைய வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

நேற்று இரவு அனைவரும் நித்திரையாகியபோது திருட்டு நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து அதனூடாக கொள்ளையர்கள் வீட்டினுள் இறங்கியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெறுகின்ற என்றும் மானிப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மை காலமாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து தாயகம் செல்பவர்களை இலக்கு வைத்து பல்வேறு கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இது குறித்து வெளிநாட்டில் இருந்து செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.