ஐ.எஸ் அமைப்புக்குத் தொடர்பில்லை!! அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார் சி.ஐ.டி பணிப்பாளர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்று காலையில் ஆரம்பித்தன.


இன்று முதலாவதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன வாக்குமூலம் வழங்கினார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இந்தோனேசியாவில் உள்ள மூன்றாம் தரப்பினருக்கு, ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலைவருக்கு
தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பாக கிடைத்த புலனாய்வு எச்சரிக்கை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தனக்கு பூரண திருப்தியில்லையென்றார்.

முன்கூட்டியே கிடைத்த புலனாய்வு அறிக்கைகளை உரிய தரப்புக்களிற்கு அறிவித்தோம். தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் சஹ்ரான் வேறு சில குற்றங்களிற்காக முன்னரே விசாரிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலாளிகள் தாஜ் சமுத்திரா ஹோட்டலையும் இலக்கு வைத்திருந்தனர். இரண்டு தடவை குண்டை வெடிக்க வைக்க தற்கொலைதாரி முயன்றார். ஆனால் அது வெற்றியளிக்கவில்லை. வீடியோ
ஆதாரங்களின் அடிப்படையில், தாஜ் சமுத்திராவும் அவர்களின் இலக்கு என்ற முடிவிற்கு விசாரணையாளர்கள் வந்துள்ளனர் என்றார்.

இந்நிலையில் இன்று சாட்சி வழங்கும் சிலரது விசாரணைகளை ஊடகங்களுக்கு இன்று வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், சில சாட்சியங்களிற்கு இன்று ஊடகங்கள்
அனுமதிக்கப்பட தீர்மானிக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.