கல்முனை வடக்கு பிரச்சினைக்குத் தீர்வு!!
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபைப் பிரச்சினைக்குத் தீர்வாக கல்முனையை மூன்று செயலகங்களாகப் பிரிக்க முனைப்பு காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில், கல்முனை செயலகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் கல்முனை பிரதேச செயலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், மருதமுனை- நற்பட்டிமுனை பிரதேசங்களை த்தை இணைத்து மருதமுனை பிரதேச செயலகம் என 3 நிர்வாக செயலகங்களாக பிரிக்க கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
கல்முனை விவகாரம் குறித்து தொடர்ந்தும் உள்ளுராட்சி, மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தனவை சந்தித்து வரும் முஸ்லிம், தமிழ் தரப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “இன்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை அமைச்சில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் என்னுடன் ஏ.எல்.எம். நஸீர், எம்.எஸ். தௌபீக், செய்யத் அலீஸாஹிர் மௌலானா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினோம்.
கல்முனை பிரதேச செயலக எல்லைப் பிரச்சினையை நீண்ட நேரம் பேசினோம். இங்கு நற்பட்டிமுனை மருதமுனை மக்களின் தேவைகளை உணர்த்தி மருதமுனைக்கான பிரதேச செயலக உருவாக்கத்தின் அவசியம் மற்றும் அது சார்பிலான சாத்தியபாடுகளை தெளிவாக விளக்கி கூறியவுடன் அந்த கோரிக்கையின் தேவையை அமைச்சரும் ஏற்றுக்கொண்டார்.
இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் நிரஞ்சனும் கலந்துகொண்டிருந்தார். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அமைச்சர் வஜிர பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த பிரதேச செயலக பிரச்சினை நிறைவுக்கு வருகின்ற தினத்தில் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாக இருக்கும் நகரசபையை உருவாக்குதல் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை