உலகின் ஒரேயொரு பிரம்மாண்ட முந்திரி மரம்!

உலகிலேயே 90 ஆயிரம் சதுர அடி அளவுக்கு நிழல் தரக்கூடிய பிரம்மாண்டமான மரம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வௌியாகியுள்ளன.


பிரேசிலில் மேலோட்டமாக பார்ப்பதற்கு அதிக மரங்களை கொண்ட பூங்காவைப் போன்று ஒற்றை முந்திரி மரம் காட்சியளிக்கிறது. இந்த மரம் கடந்த 1994 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முந்திரி மரம் என்பதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இது 90,000 சதுர அடி பரப்பளவு கொண்டு பரந்து விரிந்து காணப்படும் இந்த மரம் ஒரு காற்பந்தாட்ட மைதானத்தின் அளவை விட பெரியது. இந்த பிராங்கி முந்திரி பூங்காவை பார்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிரேசிலுக்கு வருகை தருகின்றனர்.

இந்த மரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஏழாயிரம் முதல் எண்ணாயிரம் முந்திரி பழங்களை வழங்குகின்றது. இவற்றை பழப்பாகு மற்றும் பழச்சாறுகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம். 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மரத்தின் கிளைகள் உயரமாக வளராமல், பக்கவாட்டில் வளர்ந்துள்ளன.

அதன் கிளைகள் பூமியை தொட்டதும், அப்படியே தங்கி பரவ ஆரம்பித்துவிட்டன. மேலிருந்து பார்க்கும்போது சிறிய காட்டினை போலவே காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.