மிக பழமையான இந்து ஆலயம் உடைப்பு!

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி பகுதியில் அமைந்திருந்த மிக பழமையான இந்து ஆலயமொன்று இடித்து அழிக்கப்பட்டுள்ளதுடன், ஆலயத்திலிருந்த விக்கிரகமும் களவாடப்பட்டுள்ளது.


நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலாய் வீதி ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம் மிக நீண்டகாலமாக அப்பகுதி மக்களால் வழிப்படப்பட்டு வரும் கோயிலாகும்.

இந்நிலையில் குறித்த ஆலயத்தை உருவாக்கியவரின் பிள்ளைகளுக்கிடையில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் சில முரண்பாடுகளாலேயே ஆலயம் உடைக்கப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பெருமளவு மக்களால் வழிப்படப்பட்டு  வரும் கோயிலில் இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் சிவசேனை அமைப்பின் தலைவா் மறவன்புலவு சச்சிதானந்தம் கோயிலின் தற்போதைய நிலைமைகளை பார்வையிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா ஒரு தொகை பணத்தை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.