இ.தொ.கா.வின் 80 வருட பூர்த்தி கொண்டாட்டம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 80 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறிப்பாக மலையகத்தில் உள்ள பல ஆலயங்களில் இன்று (வியாழக்கிழமை) விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இ.தொ.கா.வின் காரியாலயங்களில் விசேட நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அந்தவகையில், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் கொட்டகலை டிரேட்டன் சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பத்தனையில் அமைந்துள்ள இ.தொ.கா.வின் கட்சி காரியாலயத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் ரமேஷ்வரன், இ.தொ.கா.வின் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இ.தொ.கா.வின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம், நகரவர்த்தகர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது .
அதன் பின்னர் இலங்கை இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் பெற்றது. அதன் தலைவராக அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் செயற்பட்டு வந்தார்.
அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் மேலோங்கி வருவதற்கு பாடுப்பட்ட தலைவர்கள் மற்றும் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கான மரியாதைகளும் செலுத்தப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை