வீரம் செறிந்த ஒரு தாயின் இழப்பு நல்லையா வள்ளிப்பிள்ளை- அகால மரணம்!!

வெலிக்கடைப் படுகொலையில் அன்பழகன் என்ற தன் மகனை இழந்து,1985ல் ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுடப்பட்டு கணவன் நல்லையாவை இழந்து,விடுதலைப் போராட்டக் களத்தில் லெப்.பாண்டியன் என்ற மகனைக் கொடையாக்கி,நாட்டுப் பற்றாளனாய் செயலாற்றிவந்த தன் சகோதரன் செந்தில் அவர்களை மின்னல்த் தாக்குதலுக்கு (இயற்கை)  பறிகொடுத்து...
தனது 78 வயதுவரை உறுதி தளராது,  தன்னம்பிக்கை குலையாது வாழ்ந்த ஒரு உன்னதமான,மற்றோர் மனம் புண்படாது நடந்த தாய் திருகோணமலை,திரியாயில் 24.07.2019 அன்று காட்டு யானை தாக்கியதில் சாவடைந்தார் என்ற செய்தி வேதனை தருகின்றது. தாயே உங்கள் பாதங்களில் பணிந்து வணங்கி விடைதருகின்றோம்.  ஆத்மா சாந்தி பெற இயற்கையை வேண்டுகிறோம். உங்கள் உறவுகளோடு துயரில் பங்கு கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.