"5G அன்று கொல்லும் பொலித்தீன் நின்று கொல்லும்."!!

"நெகிழி(polytheen) குழைமம்(plastic) பாவனைகள் அற்ற பல்கலைக்கழகம்"

எனும் தொனிப்பொருளில் ஒரு திட்டத்தினை செயற்படுத்தலாம் என நினைக்கின்றோம்.



அந்த வகையில் எமது பல்கலைக்கழக  வளாகத்தினுள் எந்தவித #நெகிழி(polytheen) மற்றும் #குழைமப்(plastic) பாவனைகளோ இருக்க கூடாது. இதை எவ்வாறு செயற்படுத்துவது??

எமது கைகளில் தான் உள்ளது இதற்கென தனி மாணவர்குழு உருவாக்கப்படும் அவர்கள் இதற்கான பணிகளை கண்காணித்து  செயற்படுத்துவார்கள்.

சிற்றுண்டிச்சாலையில் சாப்பாட்டு விரிப்பு (lunch sheet) பயன்படுத்த கூடாது மாறாக வாழை இலையினை அறிமுகப்படுத்தல். மாணவர்கள் எந்த ஒரு நெகிழி பைகளையோ குழைமப் பொருட்களையோ பல்கலை வளாகத்தினுள் கொண்டுவரக் கூடாது.

வாழை இலை பயன்படுத்தினால் உணவிற்கான செலவு அதிகம் ஏற்படுமென கருதலாம் ஆனால் அது ஏழை விவசாயிகளுக்கு முதலீடாக அமையும் இதன் மூலம் வாழைத் தோட்டம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க முடியும்.

இதனால் எமக்கு என்ன இலாபம் ??? ஆம் விலை மதிப்பில்லாத ஆரோக்கியம் இலாபமாக எமக்கு கிடைக்கும்.

தனியார் நிறுவனங்களின் மென்பானங்களை (soda) தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக இயற்கை பானங்களும் அன்று கறந்த பசுப்பாலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரும் விற்பனை செய்யப்பட கூடாது மாறாக இயற்கை களிமண் கூசாவில் நீர் நிறைத்து சிற்றுண்டிசாலையில் பராமரிக்கபட வேண்டும்.

இவ்வாறு நாம் செயற்படுவதால் என்ன கிடைக்கும்???

எமது சூழல் #தூய்மை அடையும். #ஆரோக்கியம் மேம்படும்.

எமது இயற்கை சூழலை பேணிப் பாதுகாப்பது எம் அத்தனை பேரினதும் கடமை ஆகும்.

மாற்றத்தை எம்மில் இருந்து ஆரம்பிப்போம். இதற்கு எத்தனை பேர் எங்களில் தயார்??

இதெல்லாம் #சாத்தியமா??
முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை.

கடினமான இரும்பைக் கூட உக்கச் செய்யும் மண்தான் ஒரு சிறிய விதையை விருட்சமாக ஊட்டம் கொடுத்து வளர்க்கின்றது. இதுதான் இந்த #மண்ணின் தாய்மை.

இந்த மண்ணை #நெகிழி(polytheen),#குழைமம்(plastic) போன்றவற்றை போட்டு பாழாக்காமல்  தயவுசெய்து #பாதுகாப்போம்.

 கருத்துக்களை பதிவிடுங்கள்.🖊🖊

"5G அன்று கொல்லும் பொலித்தீன் நின்று கொல்லும்."-

         

மாணவர் ஒன்றியம்
யாழ்பல்கலைக்கழகம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.