பாகிஸ்தானில் 40 பயங்கரவாத குழுக்கள் -இம்ரான்கான்!
பாகிஸ்தானில் 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாக பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பிரதமர் இம்ரான்கான் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, இம்ரான்கான் சந்தித்து கலந்துரையாடிய போது இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பில் இரண்டு தலைவர்களும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் பணியாற்றி வருகின்றது. அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலில் தமக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “அல்-கைடா பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் செயல்படுகிறது. பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் இல்லை. நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக பணியாற்றி வருகிறோம். துரதிஷ்டவசமாக சில விடயங்கள் தவறாக இடம்பெற்று விட்டன.
இதற்கு எங்கள் நாட்டின் முன்னாள் அரசாங்கங்கள் தான் காரணம் என குற்றச்சாட்டுகிறேன். அங்கு உண்மையில் என்ன நடைபெறுகிறது என்பதை அமெரிக்காவிடம் கூறவில்லை.
பாகிஸ்தானில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோமா? என எங்களை போன்றவர்கள் கவலைப்படுகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற நாங்கள் உதவுகிறோம். சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை நாங்கள் எதிர்த்து வருகின்றோம்.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை அது மிகவும் சிக்கலானது. ஆனால் நாங்கள் எங்களால் முடிந்த அளவு அதிகமாக உதவுவோம். ஒட்டு மொத்த நாடும், ராணுவமும், ஏனைய பாதுகாப்பு தரப்பினருமாக அனைத்தும் என் பின்னால் இருக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் அமெரிக்காவின் நோக்கமே எங்களின் நோக்கமுமாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை