வெளிவாரி பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி!!

பட்டதாரி பயிலுர் நியமனத்தில் வெளிவாரி பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.


இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ்அறிக்கையில்,

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று அரச தொழிலுக்காக காத்திருந்தவர்கள் இந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு காரணமாக மனமுடைந்துள்ளனர்.

ஆகவே, இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என நோக்கப்படுகின்றது.

வெளிவாரி ரீதியாக பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அரச நியமனங்கள் வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சும் நாட்டின் நிர்வாகத்தை நடத்துகின்ற தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.