அவசரகால நீடிப்பு குறித்த ஒன்றுகூடல்!!

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றில் விசேட அமர்வுகள் இடம்பெறவுள்ளன.


அந்தவகையில், நாடாளுமன்றம் வரும் 31ஆம் திகதி (புதன்கிழமை) மற்றும் ஓகஸ்ட் முதலாம் திகதி ஆகிய இருதினங்களிலும் விசேடமாக கூடவுள்ளது.

இவ்விரு தினங்களிலும் சபை அமர்வு காலை 10.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்துக்கமையவே இவ்விரு தினங்களும் நாடாளுமன்றம் விசேடமாக கூடுகின்றது.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பதற்காக நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக 31ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகின்றது. அதேபோன்று ஓகஸ்ட் முதலாம் திகதி அனுதாபப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்காக கூடுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.