வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை!
சர்வதேச தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தங்களது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளமைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்காக அமெரிக்காவிற்கும், வட கொரியாவிற்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிக்கு, இந்த ஏவுகணை சோதனை பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள தென் கொரிய இராணுவ கூட்டுத் தலைமையக செய்தித் தொடர்பாளர் சோய் ஹியூன்-சூ,
‘வட கொரியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியான வான்சானிலிருந்து இரண்டு ஏவுகணைகள் நேற்று(வியாழக்கிழமை) ஏவி சோதிக்கப்பட்டன.
அந்த ஏவுகணைகளில் ஒன்று 430 கி.மீ. தொலைவுக்கு மேல் பாய்ந்து சென்று கடலில் விழுந்தது. மற்றொரு ஏவுகணை 690 கி.மீ. வரை பாய்ந்து சென்றது. அந்த இரு ஏவுகணைகளும் புதிய ரக ஏவுகணைகளாகத் தெரிகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகளால் தற்போது எழுந்துள்ள இராணுவப் பதற்றத்தைக் குறைக்க முடியாது. எனவே, இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தும்படி வட கொரியாவைக் கேட்டுக் கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த மே மாதம் நடத்தியது.
எனினும், அந்த நடவடிக்கையால் தமக்கும், கிம் ஜோங்-உன்னுக்கும் இடையிலான நட்புறவு பாதிக்கப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
குறித்த இருவரும் சிங்கப்பூரிலும், வியட்நாம் தலைநகர் ஹனோயிலும் ஏற்கெனவே இரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அடுத்தபடியாக கொரிய எல்லைப் பகுதியில் கிம் ஜோங்-உன்னை டிரம்ப் கடந்த மாதம் திடீரென சந்தித்து பேசினார்.
அதற்குப் பின்னர் வட கொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை