ஆப்கானிஸ்தான் பிரஜைகள் நாடு கடத்தல்!
இந்தோனேசியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 35 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் நாடுகடத்தப்படவுள்ளனர்.
இந்தோனேசியாவுக்குள் பாலி ஊடாக நுழைந்த இவர்கள் ரியா மாகாணத்தினை தரைவழியாக வந்தடைந்ததாக கூறப்படுகின்றது.
அங்கிருந்து மலாக்கா நீரிணையை படகு வழியாக கடந்து மலேசியாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், குடியேற்ற துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அகதிகள் இல்லை என்பதால் இவர்களை திருப்பி அனுப்புவதற்கான நிதி ஐ.நா.அகதிகள் ஆணையத்தால் வழங்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
‘அவர்களை நாங்கள் குடியேற்ற அலுவலகத்தில் தடுத்து வைத்துள்ளோம். இந்தோனேசிய அரசும் அவர்களை திருப்பி அனுப்புவதற்கான தொகையை ஏற்றுக்கொள்ளாது,’ என இந்தோனேசிய குடியேற்றத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் திருப்பி அனுப்புவதற்கான தொகையை கைது செய்யப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் பிரஜைகளின் குடும்பத்தினரே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை