கூட்டுப்படை வான் தாக்குதல் - பலர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை மேற்கொண்ட வான்தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்திலுள்ள காராபாக் மாவட்டத்தில் சையது வாலி மற்றும் மர்வார்டா ஆகிய பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படை நேற்று(சனிக்கிழமை) வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 20 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.