வைத்தியர் சிஹாப்தீன் ஷாபி விவகாரத்தில் எச்சரிக்கும் தேரர்!!
வைத்தியர் சிஹாப்தீன் ஷாபியின் சொத்துக்கள் குறித்து சிஐடி முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
தாய்மார்களுக்கு கருத்தடை செய்யப்படும் முறைமையைச் சரியாக பரிசோதனை செய்யப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை அரசாங்கம் இறக்குமதி செய்ய வேண்டும். ஏன் இந்த அரசாங்கத்திற்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்யமுடியாதா?
இறக்குமதி செய்ய முடியாவிட்டால், தேவையான உபகரணங்களை பொது மக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுவர தயார்.
வைத்தியர் சங்கம் என்ன முன்மொழிகிறது என்பதில் துணை சொலிசிட்டர் ஜெனரலோ அல்லது அட்டர்னி ஜெனரல் துறையின் துணை அட்டர்னி ஜெனரலோ வேறுபட்ட பார்வையைக் கொண்டிருக்கிறார்களா எனவும் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்?
இது குறித்த சரியான விசாரணைகளை மேற்கொள்ளாவிட்டால் குருநாகல் மக்களின் உதவியுடன் நாங்கள் உண்மையை வெளிகொணர்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் சிஹாப்தீன் ஷாபி ஆயிரக்கணக்கான சிங்கள தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டார், பல சொத்துக்களை சேர்த்தார் என பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்களும், உறுதியான சாட்சியங்களும் இல்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தார் என்றோ அல்லது குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றத்தை செய்தார் என்றோ உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் வைத்தியர் ஷாபிக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியாது எனவும் சட்டமா அதிபர், நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை