உயிர் பிரியும் நேரத்தில் தங்கையைக் காப்பாற்றிய 5 வயதுச் சிறுமி!!

சிரியாவில் அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றது. இதனால் பொதுமக்கள் நூற்றுக்கணக்காக உயிரிழக்கின்றனர்.


இந்நிலையில், விமானத் தாக்குதல் ஒன்றில், அகப்பட்டு இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கடந்த புதன்கிழமை இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து அரச படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் வீட்டில் இருந்த அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஆஸ்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர்களது 5 வயது மகள் ரிஹாம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அந்தநிலையில், இடிபாடுகளில் சிக்கிய தனது 7 மாத தங்கையான துகா கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவரின் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் காயங்களுடன் உயிர் தப்பியது.

ஆனால், தங்கையைக் காப்பாற்றிய சிறுமி ரிஹாம் பரிதாபமாக உயிரிழந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.