மீண்டும் ரணில் மைத்திரி மோதல்!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஓகஸ்ட் 5ம் திகதி தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எஃப்) என்ற புதிய கூட்டணி கைச்சாத்திடப்படும் நிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆகவும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரணில் தலைமையலான இந்த புதிய கூட்டணியால் தற்போதைய நாடாளுமன்ற சமனநிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது.
தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சிகளே பெரும்பாலும் புதிய கூட்டணியில் கைச்சாத்திடும். ஐ.தே.முன்னணி தற்போது நாடாளுமன்றத்தில் 106 ஆசனங்களை கொண்டுள்ளன.
3 இற்கும் சற்று அதிகமான சிறிலங்கா சுதந்திரக்கட்சி எம்.பிக்கள் இந்த கூட்டில் இணையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணியின் உத்தியோகபூர்வ பங்காளிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜேவிபி என்பன செயற்படாத போதும், மறைமுக பங்களாகிகளாக இருக்கும்.
புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான பிரேரணையை வரும் 31ம் திகதி ஐ.தே.க சார்பில் லக்ஷ்மன் கிரியெல்ல சமர்ப்பிக்கலாமென தெரிகிறது.
சுதந்திரக்கட்சியிலிருந்து ஒரு குழுவான வருபவர்கள், சுதந்திரக்கட்சி என்ற பெயருடனேயே இணைய முயற்சிப்பதாக தெரிகிறது. இதன்மூலம் தேசிய அரசை அமைக்க முடியுமென ஐ.தே.க கருதுகிறது.
நாடாளுமன்ற நிகழ்ச்சி பதிவேட்டில் புதிய தீர்மானம் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை 48 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களை 45 ஆகவும், நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சி ஒரு தேசிய அரசை அமைத்துள்ளதால் அதிகரித்துக் கொள்ள அனுமதிப்பதாக அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் அரசியல் நெருக்கடியின் பின், தேசிய அரசிலிருந்து சு.க விலகியது. இதன் பின் அமைச்சர்களின் எண்ணிக்கை, 19வது திருத்தத்தின் அடிப்படையில் 30 ஆக குறைக்கப்பட்டது. பின்னர் ரிசாத், ஹக்கீமின் விலகலின் பின், 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவியிலுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்க சபைக்கும் இடையில் மற்றொரு மோதலுக்கு வழிவகுக்கும்.
ஜனாதிபதி சிறிசேன தீர்மானத்தின் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்துவாரா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை