நெஞ்சு பொறுக்குதில்லையே!
செஞ்சுடர் ஏறி விளையாடும்
அஞ்சிடாத் தமிழர்
கூட்டம்!
வாஞ்சையாய் அரவணைத்து
வரலாறைப் போற்றிடும்
நாட்டம்!
வனப்பழகில் மயங்கும் பட்சிகள்
பாட்டிசைக்கும்
தோட்டம்!
கனமழை காற்றோடு மூசியடித்தாலும்
நெஞ்சோடு அணைத்து நிற்கும்
வெண்மணல் விரிப்பு!
நீலக்கடல் நீண்டு படுத்துறங்கும்
கண்கொள்ளா காட்சியின்
சிரிப்பு!
உழைக்கும் கரங்களின்
நம்பிக்கை ஒளியும்!
ஓங்கியெழும் அலையில்
ஓர்மமாய் படகேறும் பாங்கும்!
ஒன்றாய் இணைந்த மண்ணில்
வறுமையில் வீழ்ந்ததாய்
வரலாறில்லை!
கடலோரக்காற்று கட்டித்தழுவும்
ஆனந்தக் களிப்பும்!
உடலோரம் உரசிச்செல்லும்
உப்புக்காற்றின் ஈர்ப்பும்!
உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும்
ஒருபோதும் கிடைக்காத இன்பவரம்!
அடங்காப்பற்றுடன் மண்காத்த
மறத்தமிழும்!
விடங்களைத்தின்று அறங்காத்த
விடுதலைத்தமிழும்!
விடியலின் இலக்கிற்காய்
நிறம்மாறாது நீள்துயில்
கொள்வோரும்!
கரும்பனையாய் நிமிர்ந்து
உறுதியோடு நின்ற நிலம்!
இன்று
கூனிக்குறுகிய அகங்களுக்குள்
அடங்கிக்கிடப்பதும்
மேனி கருக்கியவரின்
மேய்பராய் அலைவதும்
போதை மருந்துகளின்
பாதைகளை நாடுவதும்
சீதைகளை சின்னாபின்னம்
செய்வதுமாய்
அவலம் தொடர்கிறதே...
காலம் காலமாய் பண்பாட்டுக்
கவசங்களாய் வாழ்ந்தவரின்
காதல்க்கனவுகளை கசக்கி வீசும்
காமவெறியர்களாய்
போதை மனிதர்களாய்
ஆனது கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே...
✍தூயவன்
அஞ்சிடாத் தமிழர்
கூட்டம்!
வாஞ்சையாய் அரவணைத்து
வரலாறைப் போற்றிடும்
நாட்டம்!
வனப்பழகில் மயங்கும் பட்சிகள்
பாட்டிசைக்கும்
தோட்டம்!
கனமழை காற்றோடு மூசியடித்தாலும்
நெஞ்சோடு அணைத்து நிற்கும்
வெண்மணல் விரிப்பு!
நீலக்கடல் நீண்டு படுத்துறங்கும்
கண்கொள்ளா காட்சியின்
சிரிப்பு!
உழைக்கும் கரங்களின்
நம்பிக்கை ஒளியும்!
ஓங்கியெழும் அலையில்
ஓர்மமாய் படகேறும் பாங்கும்!
ஒன்றாய் இணைந்த மண்ணில்
வறுமையில் வீழ்ந்ததாய்
வரலாறில்லை!
கடலோரக்காற்று கட்டித்தழுவும்
ஆனந்தக் களிப்பும்!
உடலோரம் உரசிச்செல்லும்
உப்புக்காற்றின் ஈர்ப்பும்!
உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும்
ஒருபோதும் கிடைக்காத இன்பவரம்!
அடங்காப்பற்றுடன் மண்காத்த
மறத்தமிழும்!
விடங்களைத்தின்று அறங்காத்த
விடுதலைத்தமிழும்!
விடியலின் இலக்கிற்காய்
நிறம்மாறாது நீள்துயில்
கொள்வோரும்!
கரும்பனையாய் நிமிர்ந்து
உறுதியோடு நின்ற நிலம்!
இன்று
கூனிக்குறுகிய அகங்களுக்குள்
அடங்கிக்கிடப்பதும்
மேனி கருக்கியவரின்
மேய்பராய் அலைவதும்
போதை மருந்துகளின்
பாதைகளை நாடுவதும்
சீதைகளை சின்னாபின்னம்
செய்வதுமாய்
அவலம் தொடர்கிறதே...
காலம் காலமாய் பண்பாட்டுக்
கவசங்களாய் வாழ்ந்தவரின்
காதல்க்கனவுகளை கசக்கி வீசும்
காமவெறியர்களாய்
போதை மனிதர்களாய்
ஆனது கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே...
✍தூயவன்

.jpeg
)





கருத்துகள் இல்லை