எடியூரப்பா அரசு வெற்றி; பதவி விலகினார் சபாநாயகர்!

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதையடுத்து, சபாநாயகர் ரமேஷ் குமார் பதவியில் இருந்து விலகினார்.


கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வாரம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு கவிழ்ந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து ஆளுநரின் அறிவுறுத்தலின்படி, முதல்வர் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியினை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவையிலே அறிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிறகு, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எடியூரப்பா முடிவு செய்திருந்ததாக முன்னதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.