யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் கைக்குண்டு மீட்பு!!
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை அண்மித்த பகுதியில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
ஆலயத்தை அண்மித்துள்ள வீதியோரமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைக்குண்டொன்று இருப்பதை அவதானித்த மக்கள் காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவுக்கும் அறிவித்தனர்.
அதற்கமைய நேற்று இரவு 8 மணியளவில் அப்பகுதிக்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் கைக்குண்டை மீட்டுச் சென்றுள்ளனர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் மகோற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், நேற்றைய தினம் சித்திர தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்நிலையிலேயே குறித்த பகுதியிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை