யாழ் நாகவிகாரைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்!
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ் நாகவிகாரைக்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ குழுவினர் காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீவிமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யாழ்.மாவட்ட முக்கியஸ்தர்கள் இந்த விஜயத்தின் போது உடனிருந்தனர்.
மேலும் நாமல் தலைமையிலான குழுவினர் இன்று யாழ் ஆயர் இல்லம், நல்லூர் ஆதின குரு முதல்வர், முஸ்லிம் மக்கள் தரப்பு, விளையாட்டு கழகங்கள், யாழ் வணிகர் கழகம் என்பவற்றுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வடமராட்சி அங்கஜனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மக்கள் மன்றம் ஒன்றும் அங்குரார்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் (வல்வெட்டி அலுவலகம் முன்பாக) இந்த நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை