இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மன்னார் – தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 முதல் 38 வயதான மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த மீனவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.